வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 டிசம்பர், 2011

புலிகளின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்தால் அழிவையே சந்திக்க நேரிடும்: சம்பிக்க


மிழ்த் தேசியக் கூட்டமைப்பை நம்பி தமிழ் மக்கள் மோசம் போகக் கூடாது. சம்பந்தன் குழுவினர் தன்னிலையை அறிந்து செயற்படுவதே சிறந்தது. வீண் பிடிவாதம் பிடித்து புலிகளின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள நினைத்தால் அழிவுகளையே சந்திக்க நேரிடும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

வடக்கு கிழக்கில் வாழ்ந்த சிங்கள மக்களை மீளக்குடியேற்றுவோம்- சம்பிக

டக்கு கிழக்கு மாகாணங்களில் முன்னர் வாழந்த சிங்கள மக்கள் தற்போது மீணடும் அப்பகுதிகளில் குடியேறுவதை தடுக்க முடியாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

புதன், 10 மார்ச், 2010

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எந்த பிரேரணை முன்வைக்கப்பட்டாலும் அது தோல்வியடையும்

ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயன்று வருகின்றன. ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டாலும் அவை தோற்கடிக்கப்படும். 2ஃ3 ற்கும் அதிகமான நாடுகள் எம்முடனே உள்ளது என அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

மகாவலி நிலையத்தில் நேற்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட் டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, இலங்கையின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தவும் படை வீரர்களின் கௌரவத் துக்கு களங்கம் ஏற்படுத்தவும் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சில மேலைத்தேய நாடுகளின் தலையீட்டினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்தது தொடர்பாக ஆராய ஆலோசனைக் குழுவொன்றை அமைக்க ஐ. நா. செயலாளர் தயாராகி வருகிறார். இதனை ஜனாதிபதி முழுமையாக நிராகரித்துள்ளார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தங்கியுள்ள பிரித்தானிய மற்றும் அமெரிக்க படைகளினால் 6 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. எதுவும் செய்யவில்லை. சகல நாடுகளையும் ஐ.நா. சமமாக நடத்த வேண்டும். ஆனால் இந்தக் கொள்கைளை ஐ.நா. மீறியுள்ளது. இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என ஜனாதிபதி தெளிவாக ஐ.நா. செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அச்சமற்ற தைரியமான செயற்பாட்டை நாம் வரவேற்கிறோம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலை காரணமாக வார இறுதி நாட்களில் 50 ஆயிரம் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். யாழ்ப் பாணத்தில் இருந்து ஒரு இலட்சம் தமிழ் மக்கள் தெற்கிற்கு வருகின்றனர். இந்த சுமூகமான சூழ்நிலையை குழப்ப புலிகளுக்கு ஆதரவான சக்திகள் முயற்சி செய்கின்றன.