வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூன், 2011

தேர்தல் நடைபெறும் சபைகளில் அதிகமானவற்றை கைப்பற்றுவோம்: சுசில்

நாட்டின் சில பகுதிகளில் 67 உள்ளூராட்சிமன்றங்களுக்கு ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சிறந்த முறையில் தயாராகிவருகின்றது. விரைவில் இது தொடர்பில் குறித்த பிரதேசங்களின் அமைப்பாளர்களுடனும் முக்கியஸ்தர்களுடனும் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளோம். தேர்தலில் நடைபெறவுள்ள சபைகளில் அதிகமானவற்றை நாங்கள் வெற்றிகொள்வோம் என்று ஆளும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

திங்கள், 24 ஜனவரி, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் 5170 வேட்பாளர்கள்

எ
திர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக 5170பேர் போட்டியிட உள்ளதாக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த இன்று தெரிவித்துள்ளர்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் கூட்டமைப்புடன் பேச்சு

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எதிர்காலத்தில் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் அதற்கான உறுதியான காலப்பகுதியை உடனடியாக கூற முடியாது என்றும் ஆளும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

வெள்ளி, 12 மார்ச், 2010

பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.வின் வெற்றி நிச்சயம்:சுசில் பிரேம் ஜயந்த



நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நிச்சயமாக வெற்றிபெறும். இது பற்றி எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எமது நோக்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதே என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் பல்கலைக்கழக சமூகத்தினரை சந்தித்து உரையாடியபோதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார். 

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஐ.ம.சு.மு வேட்பாளர் பட்டியல் இரண்டொரு தினத்தில் பூர்த்தி:சுசில் பிரேம் ஜயந்த


ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாவட்ட மட்ட வேட்பாளர் பட்டியலை இன்னும் இரண்டொரு தினங்களில் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் மாகாண மட்டத்தில் வேட்பாளர்களுக்கான நேர்முக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு மாவட்ட மட்டத்தில் வேட்பாளர்களைப் பகிர்வது குறித்து, கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகக் கூறிய அமைச்சர் எவ்வாறெனினும் எதிர்வரும் 20 ஆம் திகதிக்குள் வேட்பாளர்கள் நியமனப் பத்திரங்களில் கைச்சாத்திட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் எட்டாந்திகதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

பாராளுமன்றம் நேற்று முன்தினம் (09) நள்ளிரவு கலைக்கப்பட்டதுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் செயற்பாடுகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.

இம்மாதம் 19 ஆம் திகதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும் என வர்த்தமானி அறிவித்தலில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக வேட்பாளர் பட்டியல்களைப் பூர்த்தி செய்ய அரசியல் கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான கூட்டணி இன்னும் தீர்க்கமான முடிவு எதனையும் மேற்கொள்ளவில்லையென அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் அளவில் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களைக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் சகல கூட்டணிக் கட்சிகளுடனும் பேசி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இவ்வாரம் முடிவொன்று எட்டப்படுமென்றும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) சகல மாவட்டங்களிலும் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அதன் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கருத்து முரண்பாடு எழுந்திருந்தது. இந்நிலையில் கூட்டமைப்பால் போட்டியிடுவது பற்றிய தீர்மானம் எதனையும் கூட்டமைப்பு இன்னும் மேற்கொள்ளவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடு வதென ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. அந்தக் கட்சியின் சார்பில் 9 பேர் தேர்தலில் களமிறங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுமெனத் தகவல்கள் வெளியாகியுள்ளபோதிலும், இறுதி முடிவுகள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

ஆளுந்தரப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளும் இன்னும் ஆலோசனை நடத்தி வருகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றித் தீர்மானிக்க முடியாமல் அதன் உயர்மட்ட கலந்துரையாடலை நிறுத்தியுள்ளது. ஜனாதிபதியுடன் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்பே இறுதி முடிவெடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது