திர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளிலுமுள்ள 301 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக 5170பேர் போட்டியிட உள்ளதாக கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த இன்று தெரிவித்துள்ளர்.
"ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் வேட்பாளர்களிடமிருந்து கையொப்பம் பெறும் நடவடிக்கையும் தற்போது இடம்பெற்று வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் உறவினர்கள் வேட்பாளர்களாகத் தேர்வுசெய்யப்படவில்லை யென்றும் எதிர்வரும் 26ஆம் திகதி தேர்தல் செயலகத்தில் வேட்பாளர் பட்டியலை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’