-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமிதாப் பச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமிதாப் பச்சன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010
ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன்-அமிதாப் பச்சன்
ரஜினி இந்திய மண்ணின் நிஜமான மைந்தன். ஒரு இந்தியக் குடிமகனுக்கு சிறந்த உதாரணம் ரஜினி , என்றார் அமிதாப் பச்சன்.
புதன், 23 ஜூன், 2010
ராவண்: அமிதாப் கடும் விமர்சனம்...
..
ராவண் படம் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால் மோசமாக எடிட் செய்யப்பட்டுள்ளது... படத்தின் கதாநாயகன் பாத்திரம் எப்போதும் குழப்பமாகவே காட்சி தருகிறது, என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.
புதன், 12 மே, 2010
அமிதாப்பச்சன் இலங்கை வருவதில்லையென முடிவு
நாம் தமிழர் இயக்கத்தினரின் தொடர் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டத்தையடுத்து, கொழும்பில் நடைபெறும் சர்வதேச இந்தியப் படவிழாவில் (ஐப்பா) பங்கேற்பதில்லை என நடிகர் அமிதாப் அறிவித்துள்ளார்.
செவ்வாய், 20 ஏப்ரல், 2010
பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கை வந்தடைந்தார்.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட நிறுவகத்தின் விருந்து வழங்கும் விழா தொடர்பிலான ஊடகவிலயாளர் சந்திப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
வியாழன், 15 ஏப்ரல், 2010
புலி ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளார்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
ஐஸ்வர்யா ராய்க்கு டிபி நோய்!!!

ஐஸ்வர்யா ராய்க்கு டியூபர்குளோஸிஸ் எனப்படும் காச நோய் பாதித்துள்ளதாகவும், இதற்காக அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகியுள்ளன.
ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது வயது 37. இந்த வயதிலும் ரசிகர்களை வசீகரிக்கும் அழகு படைத்தவராகத் திகழ்கிறார் ஐஸ்வர்யா. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் அவரே நாயகி.
அவருக்கும் அமிதாப் பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஆனால் இதுவரை ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறக்கவில்லை. தாய்மைப் பேற்றை அடைய ஆர்வமுடன் இருப்பதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்தாலும், அது குறித்த. செய்திகள். எதுவும் இதுவரை வரவில்லை.
இந் நிலையில் அவரால் தாய்மை அடையமுடியாமல் போயிருப்பதன் காரணம் குறித்து மும்பை பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
ஐஸ்வர்யா ராய்க்கு டிபி நோய் தாக்கியிருப்பதால் அவரால் தாய்மை எய்த முடியவில்லை என்றும், இப்போது தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் அவருக்கு நோய் முழுமையாக குணமான பிறகே தாய்மைப் பேறு கிடைக்கும் என்றும் கூறியுள்ளன.
அபிஷேக் கோபம் ...
இதற்கிடையே இந்த செய்திகளை அறிந்து மிகவும் கோபம் கொண்டுள்ளார் அபிஷேக் பச்சன். பொறுப்பற்ற முறையிலும், தனிநபர் தாக்குதலிலும் பத்திரிகைகள் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரம்புமீறி, தவறாக வந்துள்ள இந்த செய்திகள் புண்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் அபிஷேக்.
அமிதாப் கடும் கோபம்.
இதற்கிடையே ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் இந்த செய்தி குறித்து கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப் எழுதியிருப்பதாவது ..
மேற்கண்ட செய்தியில் உள்ளதைப் பார்த்து நான் கடும் கோபமடைந்துள்ளேன். அதில் உள்ள ஒரு வரி கூட உண்மையானதில்லை. அத்தனையும் பொய்.
நான் எனது குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா எனது மருமகள் இல்லை, மகள், ஒரு பெண்.
அவரைப் பற்றி யாரேனும் அவதூறாகப் பேசினால் எனது இறுதி மூச்சு வரை அதை எதிர்த்து நான் போராடுவேன். எனது வீட்டில் உள்ள ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள், எனது மகனைப் பற்றிப் பேசுங்கள்.
ஆனால் எனது வீட்டுப் பெண்கள் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.
மும்பை டேப்ளாய்ட் வெளியிட்டுள்ள செய்தி முட்டாள்தனமானது, கற்பனையானது, கொஞ்சம் கூட தரமே இல்லாத ஜர்னலிசம் இது என்று கோபமாக கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
திங்கள், 7 டிசம்பர், 2009
சென்னையில் அமிதாப்... இளையராஜாவுடன் 'பா' பார்த்தார்!

'இசைத் துறையில் நிஜமான மேதை இளையராஜா' எனப் பாராட்டினார் அமிதாப் பச்சன்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சனிக்கிழமை சென்னை வந்தார். இளையராஜாவுடன் பா படத்தின் சிறப்புக் காட்சியில் பங்ககேற்றார்.
இளையராஜா இசையில், பால்கி இயக்கத்தில், அமிதாப்பின்மிக வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள பா திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் பாராட்டுக்களும் அந்தப் படத்துக்கு குவிகின்றன.
படத்தின் பாடல்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
படம் வெளியான தினத்தன்று மும்பையில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அமிதாப், அதில் பங்கேற்க வருமாறு இளையராஜாவை அழைத்துள்ளார். ஆனால் ராஜாவால் போக முடியவில்லை.
எனவே இளையராஜாவுக்காக சென்னையில் ஒரு தனி ஷோவுக்கு ஏற்பாடு செய்ததிருந்தது அமிதாப்பின் ஏபி கார்ப்பரேஷன்.
சனிக்கிழமை மாலை நடந்த இந்த சிறப்புக் காட்சியில் திரையுலகினர் பெருமளவில் பங்கேற்று, இசையுலகின் எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் இளையராஜாவுக்கும், பாலிவுட்டின் நிரந்தர சூப்பர் ஸ்டார் அமிதாப்புக்கும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
படம் துவங்குவதற்கு முன், சில நிமிடங்கள் இளையராஜாவும், அமிதாப்பும் மைக்கில் பேசினர்.
அப்போது, சென்னை தனக்கு மிகவும் பிடித்த நகரம் என்றார் அமிதாப்.
"இந்தியாவிலேயே அதிக ஒழுக்கம் மிகுந்த நகரம் சென்னைதான். இந்தப் படம் தமிழ்க் கலைஞர்களால் உருவான மிகச் சிறந்த படைப்பு. பால்கியும் பிசி ஸ்ரீராமும் அற்புதமான கலைஞர்கள். இவர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை. என்னைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு நிஜமான, சுத்தமான இசை மேதை.
அவரது இசையில் என் படம உருவானது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஏற்கெனவே சீனி கும் படத்தின் பாடல்கள் பெரும் சாதனை நிகழ்த்தின. இப்போது பா அதை முறியடித்துள்ளது" என்றார்.
மகா கலைஞன் அமிதாப்-ராஜா:
பின்னர் பேசிய இசைஞானி, "அமிதாப் போல ஒரு மகா கலைஞனை பார்ப்பது மிக அரிது. திறமை, அடக்கம் இரண்டும் ஒருசேர அமைந்த நடிகர். இந்தப் படத்தில் எங்கள் பங்களிப்பை விட அமிதாப்பின் பங்களிப்பு உயர்ந்தது, மதிப்பு மிக்கது. பால்கியின் திரைக்கதை படத்தின் மேஜிக்" என்றார்.
தமிழ்த் திரையுலக முக்கியஸ்தர்கள் அனைவருமே திரண்டு வந்து ராஜாவுக்கும் அமிதாப்புக்கும் பொன்னாடை, மலர்க்கொத்து கொடுத்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















.jpg)