தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பிரபல பொலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் எனவும் அமிதாப் பச்சனிடம் புலி ஆதரவாளர்கள் கோரியுள்ளனர்.
எனினும், குறித்த கோரிக்கையை அமிதாப் பச்சன் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், எதிர்வரும் 20ம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என பல தமிழக புலி ஆதரவாளர்கள் அமிதாப் பச்சனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், அமிதாப்பின் விஜயத்தை தடுக்க இலங்கையிலிருந்தும் பல புலி ஆதரவாளர்கள் மின் அஞ்சல்களை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நோக்கில் அமிதாப் பச்சன் கொழும்புக்கு விஜயம் செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-













.jpg)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’