வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 ஏப்ரல், 2010

த‌மிழக அர‌சி‌ன் உ‌த்தரவு‌க்கு எ‌திரான ந‌‌ளி‌னி மனு ‌மீதான ‌விசாரணையை வரு‌ம் 19ஆ‌ம் தே‌தி‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ஒத்திவை‌‌த்து‌ள்ளது.
சிறை‌யில் இரு‌ந்து ‌விடு‌வி‌க்க முடியாது எ‌ன்ற த‌‌மிழக அர‌சி‌ன் உ‌த்தரவை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ந‌‌ளி‌னி கட‌ந்த 12ஆ‌ம் தே‌தி மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

அ‌தி‌ல், த‌ம்மை ‌விடு‌க்க இயலாது எ‌ன்பத‌ற்கு த‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ள காரண‌ம் இ‌ந்‌திய அர‌சிய‌ல் அமை‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌திரானது எ‌ன்று மனு‌வி‌ல் ந‌‌ளி‌னி கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.
மேலு‌ம் 10 ஆ‌ண்டுக‌ளி‌ல் 2 ஆ‌யிர‌ம் ஆயு‌ள் த‌‌ண்டனை கை‌திகளை கருணை அடி‌ப்படை‌யி‌ல் த‌மிழக அரசு ‌விடுதலை செ‌ய்‌திரு‌ப்பதாகவு‌ம், ‌த‌ம்முடைய விடுதலை‌க்கு ம‌ட்டு‌ம் பொலிஸாரிடம் அ‌றி‌க்கை கே‌ட்பது பாரப‌ட்சமானது எ‌ன்று‌ம் எனவே த‌ம்மை ‌விடுதலை செ‌ய்ய முடியாது எ‌ன்று த‌‌மிழக அர‌சு ‌பிற‌ப்‌பி‌‌த்த உ‌த்தரவை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் மனு‌வி‌ல் ந‌‌ளி‌‌னி தெ‌ரி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர்.
இ‌ந்த மனு ‌இ‌ன்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, ஏ‌ற்கனவே ந‌ளி‌னி மனு ‌நிராக‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டது ஏ‌ன் எ‌ன்பது கு‌றி‌‌த்த உ‌த்தரவு நகலை தா‌க்க‌ல் செ‌ய்ய ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டது.
ஆனா‌ல் ந‌ளி‌னி வழ‌க்க‌றிஞ‌ர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் மனுவை நிராகரிக்கப்பட்டதற்குரிய நகலை வழங்க அவகாச‌ம் கே‌ட்டதா‌ல் வழ‌க்கு ‌விசாரணை வரு‌ம் 19ஆ‌ம் தே‌‌தி‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்‌ளிவை‌த்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’