வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

ஐஸ்வர்யா ராய்க்கு டிபி நோய்!!!


ஐஸ்வர்யா ராய்க்கு டியூபர்குளோஸிஸ் எனப்படும் காச நோய் பாதித்துள்ளதாகவும், இதற்காக அவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது வயது 37. இந்த வயதிலும் ரசிகர்களை வசீகரிக்கும் அழகு படைத்தவராகத் திகழ்கிறார் ஐஸ்வர்யா. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் அவரே நாயகி.

அவருக்கும் அமிதாப் பச்சன் மகன் நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆனால் இதுவரை ஐஸ்வர்யா ராய்க்கு குழந்தை பிறக்கவில்லை. தாய்மைப் பேற்றை அடைய ஆர்வமுடன் இருப்பதாக ஐஸ்வர்யா ராய் தெரிவித்தாலும், அது குறித்த. செய்திகள். எதுவும் இதுவரை வரவில்லை.

இந் நிலையில் அவரால் தாய்மை அடையமுடியாமல் போயிருப்பதன் காரணம் குறித்து மும்பை பத்திரிகைகள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஐஸ்வர்யா ராய்க்கு டிபி நோய் தாக்கியிருப்பதால் அவரால் தாய்மை எய்த முடியவில்லை என்றும், இப்போது தீவிர மருத்துவ சிகிச்சை எடுத்து வரும் அவருக்கு நோய் முழுமையாக குணமான பிறகே தாய்மைப் பேறு கிடைக்கும் என்றும் கூறியுள்ளன.

அபிஷேக் கோபம் ...

இதற்கிடையே இந்த செய்திகளை அறிந்து மிகவும் கோபம் கொண்டுள்ளார் அபிஷேக் பச்சன். பொறுப்பற்ற முறையிலும், தனிநபர் தாக்குதலிலும் பத்திரிகைகள் இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வரம்புமீறி, தவறாக வந்துள்ள இந்த செய்திகள் புண்படுத்துகின்றன என்று கூறியுள்ளார் அபிஷேக்.

அமிதாப் கடும் கோபம்.

இதற்கிடையே ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன் இந்த செய்தி குறித்து கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப் எழுதியிருப்பதாவது ..

மேற்கண்ட செய்தியில் உள்ளதைப் பார்த்து நான் கடும் கோபமடைந்துள்ளேன். அதில் உள்ள ஒரு வரி கூட உண்மையானதில்லை. அத்தனையும் பொய்.

நான் எனது குடும்பத்தின் தலைவர். ஐஸ்வர்யா எனது மருமகள் இல்லை, மகள், ஒரு பெண்.

அவரைப் பற்றி யாரேனும் அவதூறாகப் பேசினால் எனது இறுதி மூச்சு வரை அதை எதிர்த்து நான் போராடுவேன். எனது வீட்டில் உள்ள ஆண்களைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசி விட்டுப் போங்கள். என்னைப் பற்றிப் பேசுங்கள், எனது மகனைப் பற்றிப் பேசுங்கள்.

ஆனால் எனது வீட்டுப் பெண்கள் பற்றி யாராவது தவறாகப் பேசினால் அதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்.

மும்பை டேப்ளாய்ட் வெளியிட்டுள்ள செய்தி முட்டாள்தனமானது, கற்பனையானது, கொஞ்சம் கூட தரமே இல்லாத ஜர்னலிசம் இது என்று கோபமாக கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’