வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அசாத் சாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அசாத் சாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஏப்ரல், 2013

முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஜம் இய்யத்துல் உலமாவே பதில் சொல்ல வேண்டும் : அசாத் சாலி



முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை நிறைவுபெற்றுவிட்டதால் பள்ளிகளில் குனூத் ஓதுவதை நிறுத்துமாறு ஜம் இய்யத்துல் உலமாவும் அதன் பொதுச் செயலாளரும் அறிக்கைவிட்டுள்ளனர். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளிலும் குனூத்தை ஓத வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் அமைந்துள்ள அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

அரசாங்கத்தின் கூற்றுக்கு முஸ்லிம் சமூகம் வெட்கப்பட வேண்டும்: அசாத் சாலி


நாட்டில் எந்தவொரு முஸ்லிம் மதஸ்தலமும் இதுவரையில் தாக்குதலுக்குட்பட்டிருக்கவில்லை அவ்வாறு தாக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித்தலைவரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கரிப்பதாக அரசாங்கம் கூறுவதை எண்ணி நாட்டிலுள்ள முஸ்லிம் மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் என கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

ஞாயிறு, 29 நவம்பர், 2009

அசாத்சாலியும் ஜோன்ஸ்டனும் நாளை ஊடகவியலாளர் மாநாடு .


பொன்சேகாவை தோற்கடிப்பதில் உறுதி:
ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப் பதில் உறுதியாக உள்ளதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான அசாத் சாலி வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சியின் மற்றொரு முக்கியஸ்தரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி மக்களுக்குத் தெளிவுபடுத்தப் போவதாக அசாத் சாலி கூறினார்.

பொன்சேகாவைத் தோற்கடிக்க வேண்டுமென்ற தமது நிலைப்பாடு குறித்து, பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் தம்மு டன் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறிய அவர், ஐ. தே. க. ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் உண்மை நிலையை விளக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இறுதியாக மக்களின் தீர்மானத்தையே ஏற்பதாகவும் அவர் கூறினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவைத் தோற்கடிப்பதானால் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பீர்களா என்று ‘தினகரன்’ கேட்டதற்குப் பதிலளித்த அசாத் சாலி ‘அவ்வாறென்றால் அதன் மறு பக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுக் கூட்டத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டதையடுத்து அந்தக் கூட்டத்திலிருந்து அசாத் சாலி வெளிநடப்புச் செய்தார். இதனையடுத்து, அசாத்சாலி ஐ. தே. க. செயற்குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இதேவேளை ஐ. தே. க. குருநாகல் மாவட்ட எம். பி. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும், ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கு ஐ. தே. க. எடுத்த தீர்மானத்தை கண்டித்து செயற்குழுவிலிருந்து வெளி யேறியதோடு, ஐ. தே. க. அமைப்பாளர் பதவியையும் இராஜினாமாச் செய்துள்ளார்.