வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

காணிகள் வழங்கும் அதிகாரம் எனக்கில்லை: றிசாட்

க்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் காணி அமைச்சருக்கே இருக்கின்றது. எனக்கு காணிகள் வழங்கும் அதிகாரமில்லை என அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
வட மாகாணத்திலுள்ள காணிகளை வழங்கும் அதிகாரம் எனக்கு ஒருபோதும் வழங்கப்படவுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். முஸ்லிம்களுக்கு நான் காணிகளை பகிர்ந்தளிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் தன் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் அதிகாரம் அரசாங்கத்தினால் எனக்கு வழங்கப்பட்டவில்லை. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 9ஆவது சரத்தின் 113ஆவது பிரிவில் குறிப்பிட்டப்பட்டுள்ளதிற்கு அமைய குழுவொன்றை அமைத்தே வடக்கில் காணிகள் வழங்கப்படுகின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தலைமையிலான இந்த குழுவில் ஜனாதிபதி செயலணியின் பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த குழுவின் சிபாரிசிற்கு அமையவே அங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மக்களின் உறவு பாதிக்கப்படுவதற்கு தூண்டுகோலாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை என்று கூறும் இவர்கள் ஏன் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதேவேளை, முல்லைத்தீவு, முள்ளியவலையில் ஏழை மக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டமையை வன்மையாக கண்டிக்கின்றேன்;. இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நான் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நஷ்டஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளேன். இதற்கு மேலதிகமாக குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளேன். இது இவ்வாறிருக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்மீதும் முஸ்லிம் சமூகத்தின் மீதும் வீண்பழி சுமத்துகின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களினால் எவ்வாறு பெரும்பான்மையாக வாழந்து வரும் தமிழர்களின் குடிசைகளை தீ மூட்ட முடியும்? மீள்குடியேற்ற அமைச்சரா நான் செயற்பட்டபோது எந்தவொரு முஸ்லிமையும் மீள்குடியேற்றாது தமிழர்களை மாத்திரமே மீள்குடியேற்றினேன். எனினும், சுமார் 22 வருடங்களாக அகதியாக வாழ்ந்த மக்களை இன்று மீளக்குடியேற்றும்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவிற்கு மீள்குடியேற்றப்படும் முஸ்லிம்கள் காணியின்றி தவிக்கின்றனர். இவர்கள் முன்னர் வாழ்ந்த காணிகள் படையினரின் முகாமாகவும் விடுதலை புலிகளினால் தமிழ் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டும் காடாக காணப்பட்டமையினால் வனத்திணைக்களத்தினால் காடாகவும் பிரணகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலேயே முஸ்லிம்கள் வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்படுகின்றனர்" என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’