வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஊடகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரித்தானியா

டகவியலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரித்தானிய அரசாங்கம் இலங்கையிடம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியாக உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிபிசி சர்வதேச ஊடகத்தின் ஒலிபரப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். பக்கச்சார்பற்ற செய்திகள் மக்களை சென்றடைவதற்கு தடைகள் ஏற்படுத்தப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2012 நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளின் போதும் இது குறித்து பிரித்தானியா வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இது தொடர்பான விசேட பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பிரித்தானியா கோரியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், குறி;த்த பிரதிநிதியின் விஜயத்தை இலங்கை அனுமதிக்க மறுத்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’