வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 ஏப்ரல், 2013

ஆஸி. வரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர்:


கதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்துக்கான தகமைகள் இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதிகளாக அவுஸ்திரேலியா வருவோர், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்படும் போது அகதிகளுக்கான விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுடையவர்கள் இல்லையெனின் திருப்பி அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோனர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, '25 அகதிகளைக் கொண்ட ஒரு குழு மிக அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக' சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களது தகுதியின்மை குறித்து அறிவித்தும் அகதி விதிமுறைகளுக்கமைய அவர்களுக்கு புகலிடம் கோரும் தகுதி இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இங்கிருக்க அவர்களுக்கு விசாவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள கோனர், கடந்த வருடம் ஓகஸ்ட் முதல் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 1029 ஆகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களில் 89பேர் அவர்களின் சுயவிருப்பின் பேரில் சென்றனர் என்றும் இந்த சட்டவிரோத குடியேற்றத்துக்கு துணைபோகும் முகவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். தோடர்ந்தும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வருபவர்கள், நவுறு மற்றும் மனுஷ் தீவுகளில் மட்டுமே தங்கவைக்கப்படுவம் என்றும் அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’