வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 ஏப்ரல், 2013

அரசாங்கம் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தாது தனது தவறை உணர்ந்து தீர்வை வழங்க வேண்டும் : சம்பந்தன் எம்.பி.



லங்கையின் தேசிய பிரச்சினை சர்வதேச ரீதியில் சென்றமைக்கு உள்நாட்டில் பிரச்சினை தீர்க்கப்படாமையே காரணமாகும். அத்துடன் அரசு- கூட்டமைப்பு பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரையில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் உரிமைகளுக்கு எங்கு எப்போது அநீதி இழைக்கப்பட்டதோ அதற்காக குரல் கொடுத்து வாதாடிய ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா. தமிழ் மக்களுக்கு பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் சத்தியாக்கிரகம் மற்றும் அகிம்சை வழியில் பல போராட்டங்களை மேற்கொண்டார். ஒருபோதும் பயங்கரவாதத்தை அவர் விரும்பவில்லை. அவரது தலைமையில் தமிழினம் இருக்கும் போது தமிழர்களுக்கு எதிராக பல வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டாலும் உறுதியுடனும் நேர்மையுடம் தனது அகிம்சை போரட்டத்தை முன்னெடுத்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் பிரச்சினைகளை பேச்சுக்கள் மூலம் தீர்ப்பதிலும் உறுதியுடன் செயல்பட்டார். பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க போன்ற பெரும் சிங்களத் தலைவர்களுடன் முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இருப்பினும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. உரிமைகளட விடயத்தில் அவர் மிகவும் உறுதியாக செயல்பட்டார். இந்நிலையில் ஆயுதப்போராட்டமும் வன்முறையும் தந்தை செல்வா மறைந்த பின்னரே ஆரம்பமாகின. இவ்வாறு ஆரம்பித்த போராட்டம் பல வடுக்களையும் கொடுத்து விட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இச் சூழலில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய பிரிக்கப்படாத இலங்கைக்குள் பேச்சுவார்த்தை மூலம், நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய, நிலைநிற்கக் கூடிய அரசியல் தீர்வுக்கு தயாராகவேயுள்ளது. அந்தவகையில் நாம் இலங்கை அரசுடன் கடந்த 2011 ஆம் ஆண்டுமுதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தோம். நாம் எழுத்து மூலம் பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வைத்தருமாறு பிரேரணையை முன்வைத்தோம். அதற்கு அரசாங்கம் கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதில் தருவதாக வாக்குறுதியளித்தது. இன்னும் அதற்கான பதில் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை. பேச்சுவார்த்தையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. அவையெல்லாம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, நாம் எமது கொள்கையிலும் கோட்பாட்டிலும் உறுதியாய் இருப்போம். இதிலிருந்து எப்போதும் விலகமாட்டோம். இதேவேளை, கடந்த 2012 ஆம் ஆண்டு தை மாதம் 17ஆம் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் சமூகம் தராது பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டது. அரசாங்கம் இதற்கு பூரண ஒத்துழைப்புத் தரவில்லை. தற்போதைய நிலைக்கு அரசாங்கமே பொறுப்பு என்பதை நாம் பகிரங்கமாக தெரிவிக்கின்றோம். அதற்கு முக்கிய காரணம் அரசாங்கம் ஒரே குரலில் பேசுவதில்லை. முரண்பட்ட கருத்துக்களையே முன்வைக்கின்றது. இந்நிலையில் நீண்ட கால பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இதையடுத்து நீண்ட கால ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையிலும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதையடுத்தே எமது நாட்டின் தேசிய பிரச்சினை சர்வதேச ரீதிக்கு சென்றது. எமது நாட்டுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனை எல்லோரும் குறிப்பாக அரசாங்கமும் உணர வேண்டும். இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது குற்றம் சுமத்தி எவ்வித பயனும் இல்லை. அரசாங்கம் தனது பிழையை உணர்ந்து பிரச்சினையை தீர்க்க முன்வர வேண்டும். நிரந்தர சமாதானம் ஏற்படக் கூடியவகையில் அரசியல் தீர்வைக்காண நாம் தயாராகவேயுள்ளோம். அதற்கு நாம் ஒருபோதும் பின்னிற்கமாட்டோம். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக ஊடகங்களில் பல தவறான செய்திகள் வெளிவருகின்றன. அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லதொரு ஜனநாயகக் கட்சி. எமக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை. சுயமரியாதையுடன் கண்ணியமாக வாழ, அபிலாஷைகளை அடைய நாம் முழுமையாக செயற்பட்டுவருகின்றோம். தொடர்ந்தும் நாம் செயற்படுவோம். தற்போது உள்ரீதியாக கட்சிகளுக்கிடையில் சில முரண்பாடுகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வைக் காண கடுமையான முயற்சியில் ஈடுபட்டுவருகின்றோம். அதை வெகு விரைவில் காண்போம். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’