வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 ஏப்ரல், 2013

அரசியலில் சூழ்நிலைக் கைதியாக உள்ளேன்: ஹக்கீம்



Fஅரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர், யாழில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 'தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார் சாத்தியமானவற்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு பற்றி நான் இங்கு தெளிவு படுத்தவேண்டும். 'தனிமரம் தோப்பாகாது' என்பதை நாங்கள் புரிந்துகொண்டு இந்த முடிவை எடுத்திருக்கின்றோம். இதற்காக தமிழ் மக்கள் எங்களை வஞ்சிக்க துணிய மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இந்த நாட்டில் நாங்கள் தற்போது சூழ்நிலைக் கைதிகளாகவே இருந்து வருகின்றோம். இந்த சூழ்நிலையில் நாங்கள் சரியென நினைத்து எடுக்கும் முடிவுகளும் பிழையானதாக அமையும். அதேபோல பிழை என்று நினைத்து எடுக்கும் முடிவுகளும் சிலவேளை சரியானதாக அமையும். 'தனிமரம் தோப்பாகாது' இதனையே நன்கு உணர்ந்தவர்காளாகவே இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இவ்வாறானதொரு முடிவை எடுக்க நேர்ந்தது. இதற்காக தமிழ் மக்கள் எங்களை வஞ்சிக்க துணிய மாட்டார்கள் என்று நம்புகின்றேன். இன்று தென்னிலங்கையில் யுத்திற்கு பின்னரான வெற்றிக்களிப்பில் மோசமான அரசியல் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் சமூகம் முகம்கொடுத்து வருகின்றது. காவி உடை தரித்தவர்களினால் முஸ்லிம் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இனத்துவேசம் கக்கப்படுகின்றது. இதனை சமாளித்துப் போகலாம் என்ற உப்புச் சப்பற்ற அணுகுமுறையே இன்று காணப்படுகின்றது. எமக்கெதிராக தூரோங்கங்களும் கழுத்தறுப்புக்களும் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இவற்றின் மத்தியில் தான் எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. இவ்வாறான இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் சரியான முடிவு ஒன்றை எடுப்போம். தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடக்கு மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தேர்தல்களைப் புறக்கணித்ததால் ஏற்பட்ட பிரச்சினைகளை நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் இந்த தவறை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விடமாட்டார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அத்துடன் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு தென்னிலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் ஒரு மாறாத வடுவாக இருப்பதைப் போல 1990ஆம் ஆண்டு யாழில் இருந்து வெளியேற்றப்பட்டமை என்றைக்கும் மாறாத வடுவாகவே இருக்கின்றது. தமிழ் இயக்கங்களிடையே போதியளவு அரசியல் தன்மை இல்லாமையினால் தான் இந்த வன்முறைகள் இடம்பெற்று விடுதலைப் புலிகள் இயக்கம் ஏற்படுத்திய பிரிவினைவாதத்தினால் தான் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்படுதப்பட்டது. தற்போது இந்த நிலை மாற்றப்பட்டு வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் இரு சமூகங்களிடமும் ஒன்றுமை ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். அத்துடன் இரு சமூகங்களும் ஒற்றுமையை வெளிப்படுத்தி தந்தை செல்வாவின் தடம்பதித்து புதிய யுகம் படைப்போம்' என்று அவர் கேட்டுக்கொண்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’