வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 ஏப்ரல், 2013

அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் தனித்து பேசுவதில் அர்த்தமில்லை : பஷில்



னப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு என்பது சகல கட்சிகளிடமும் இருந்துவரவேண்டியது அவசியமாகும். எனவே அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளக்கூடிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதே கூட்டமைப்புக்கு தற்போது உள்ள ஒரே தெரிவாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். வேண்டுமானால் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். ஆனால் அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக அமையாது. காரணம் இரண்டு கட்சிகள் பேச்சு நடத்தியோ இரண்டு நபர்கள் பேச்சு நடத்தியோ அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை அடைய முடியாது. இதற்கான ஆணையை மக்கள் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஒற்றையாட்சி முறைமையின் கீழ் கீழ் மட்டத்துக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எந்தவொரு செயற்பாடானாலும் அது மஹிந்த சிந்தனைக்கு மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்று கடந்த வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில், அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணவேண்டும் என்ற தேவை இருந்தால் அவர்களே பேச்சுக்கு வரவேண்டும். அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெறவேண்டும். இதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும். அதனை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எவ்வாறான நிபந்தனையையும் விதிக்க முடியாது. அதேபோன்று நாங்கள் கூட்டமைப்புக்கு எவ்விதமான வாக்குறுதிகளை வழங்கவும் முடியாது. வழங்கவும் மாட்டோம். அவ்வாறு நிபந்தனைகளை ஏற்பதற்கோ அல்லது வாக்குறுதிகளை வழங்குவதற்கோ அரசாங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கவில்லை. மஹிந்த சிந்தனையின் பிரகாரம் அவ்வாறு செய்யவும் முடியாது. ஏனெனில் மக்கள் எங்களுக்கே ஆணை வழங்கியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்த சரத் பொன்சேகாவை மக்கள் நிராகரித்துவிட்டனர். தீர்வுவேண்டுமாயின் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டியது அவசியமாகும். ஜனநாயக ரீதியில் அனைத்துக் கட்சிகளினதும் பங்களிப்புடனும் தீர்வை நோக்கிச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு இருகட்சிப் பேச்சுக்கள் பயனுடையதாக அமையாது. வேண்டுமானால் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால் அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக அமையாது. காரணம் இரண்டு கட்சிகள் பேச்சு நடத்தியோ இரண்டு நபர்கள் பேச்சு நடத்தியோ அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை அடைய முடியாது. ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் இருதரப்பு பேச்சுவார்ததைகளை நடத்தலாம். ஆனால் அது தீர்வு தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுப்பதற்கு உதவியாக அமையாது. அதனால்தான் தெரிவுக்குழுவுக்கு வருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். அரசாங்கத்தை பொறுத்தவரை ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. அதாவது ஒற்றையாட்சி முறைமையின் கீழ் , கீழ் மட்டத்துக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு எமது அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. எந்தவொரு செயற்பாடானாலும் அது மஹிந்த சிந்தனைக்கு மக்கள் அளித்த ஆணையின் பிரகாரமே முன்னெடுக்கப்படும். அரசியல் தீர்வு என்பது அரசியலமைப்பு மாற்றங்களுடன் தொடர்புபட்டதாகும். எனவே அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டுமாயின் அது பாராளுமன்றத்தினால் மட்டுமே முடியும். அப்படிப்பார்க்கும்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே இருக்கின்ற ஒரே தெரிவாகும். இதேவேளை, எமது அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக இலங்கைப் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப்படவில்லை. மாறாக திம்புப் பேச்சுவார்த்தை முதலே இந்தப்பிரச்சினை சர்வதேசமயமாகிவிட்டது. அதுமட்டுமன்றி இந்தியாவின் தலையீடு மற்றும் நோர்வேயில் பேச்சுவார்த்தை என விடயம் சர்வதேசமயப்படுத்தப்பட்டது. எமது அரசாங்கம் பதவிக்கு வரும்போது இலங்கையில் இணைத்தலைமை நாடுகள் மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு என்பன இருந்தன. நாமே அவற்றை நிறுத்தினோம். அத்துடன் சர்வதேசமயப்படுத்தலை எமது அரசாங்கமே குறைத்தது எந்தவொரு நாடும் தலையிடாத நிலைமையை எமது அரசாங்கமே உருவாக்கியது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’