
வீடுகளில் திடீர் சோதனைகள் நடக்கவுள்ளதாக பரவிய செய்தியை தொடர்ந்து வீடுகளைவிட்டு ஓடிவந்து தூதரகத்தில் அடைக்கலம் கோரும் பெண்களில் தொகை கணிசமான அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். சவூதி அரேபியாவுக்கு வந்து 3 மாதங்களுக்குள் பலர் தமது வேலையைவிட்டு ஓடிவிடுவதாக ஓர் ஆய்வு வெளிப்படு;தியுள்ளது. கொடுமைப்படுத்தல், சம்பளம் வழங்காமை போன்றவை இவர்கள் கூறும் பொதுவான குற்றச்சாட்டுக்களாக உள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வழமையான ஒப்பந்தப்படி மாதம் 650 றியால் சம்பளம் வழங்கப்படும்போது, இவ்வாறு ஓடிவரும் பெண்கள் 1500 றியால் சம்பளத்துடன் வேலை பெறக்கூடியதாக உள்ளது. கொழும்பிலிருந்து ஒரு பணிபெண்ணை பெற்றுகொள்ள 15000 றியாங்வரை செலவளிக்க வேண்டும். ஆனால், ஓடி வருபவர்களை வேலைக்கமர்த்தினால் இந்த செலவு இல்லை. இதனால்தான் ஓடிவரும் பணிப்பெண்களுக்கு கூடிய சமபளம் கொடுக்க சவூதி வேலை கொள்வோர் தயாராக உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’