வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
சவுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

சவுதியில் அடைக்களம்கோரும் பணிபெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு



தா ம் வேலை செய்யும் வீடுகளையிட்டு ஓடிவந்து இலங்கை தூதரகத்தில் அடைக்களம்கோரும் பணிபெண்களின் தொகை கடந்த இரண்டு வாரங்களில் இரட்டித்துவிட்டதாக சிரேஷ்ட தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளி, 29 மார்ச், 2013

சவுதி அரசின் அதிரடி முடிவு: இலங்கையர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம்?



வுதி அரேபியாவில் சிறிய மட்டும் நடுத்தர நிறுவனங்களுகளில் தொழில்புரியம் இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர் பலர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனி, 9 பிப்ரவரி, 2013

சவுதியில் இலங்கையருக்கு 1 வருட சிறையுடன் 100 கசையடிகள்


வுதி அரேபியாவில் நண்பர்களோடு இணைந்து சூனியம் மற்றும் மாந்ரீக நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கையொருவருக்கு 1 வருட சிறையும் 100 கசையடியும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 6 நவம்பர், 2009

சவுதியில் மரண தண்டனை நிறைவேற்ற முன்னர் இலங்கை துதரகத்திற்கு அறிவிக்கப்படவில்லை.


சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் குழந்தைகளை தாயார் பாரமெடுத்தார். சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம்.
சவுதி அரேபியாவில் களவு மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருந்தார்கள் எனும் குற்றங்களுக்காக இலங்கையைச் சேர்ந்த ஆண் , பெண் மற்றும் இந்தியர் ஒருவருமாக மூவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்து. ஆனால் இம்மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக சவுதி அரசினால் இலங்கை தூதரகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அதை அவர்கள் இரகசியமாக செய்து முடித்துள்ளார்கள் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வழக்கில் 7 இலங்கையர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அவர்களில் ஐவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தூதரகம், மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் சவுதியில் இருந்த காலப்பகுதியில் இந்தியர் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன் அவரும் குறிப்பிட்ட வழக்கில் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பெண்ணுக்கும் இந்தியருக்கும் இரு குழந்தைகள் உண்டு எனவும் அக்குழந்தைகளை பெண்ணின் தாயாரிடம் பாரமளிப்பதற்கு இலங்கைத் தூதரகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அப்பெண்ணது முதல் தார திருமணத்தின் போது இரு குழந்தைகள் உண்டு என்பது அக்குழந்தைகளும் பெண்ணின் தாயாரின் பாதுகாப்பிலேயே இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி மரண தண்டனைகளுக்கு சர்வதேச மன்னிப்புச்( Amnesty International) சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், 2007ம் ஆண்டில் 76 வெளிநாட்டவர்கள் உட்பட 158 பேரும், 2008 ஆண்டில் 40 வெளிநாட்டவர்கள் உட்பட 102 பேரும், 2009 ஆண்டின் ஆரம்பம் முதல் இன்றுவரை 18 வெளிநாட்டவர்கள் உட்பட 61 பேரும் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியவர்களாக 106 வெளிநாட்டவர்கள் உட்பட 137 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் நிறைவேற்றப்பட்டுவரும் மரண தண்டனைகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கொலைகாரனின் தலை சவூதியில் வெட்டப்பட்டு சிலுவையிலிடப்பட்டது.


சவூதி அரேபியாவில் ஐந்து குழந்தைகளை கடத்தி அவர்களை பாலியல் வல்லுறவுக் குட்ப்படுத்தி அதில் ஒருவரை பாலைவனத்தில் பதை பதைக்க இறக்க விட்ட முகம்மட் பஸீர் அல்-ரம்லி என்ற சவூதியைச் சேர்ந்த இருபத்திரெண்டு வயதையுடைய இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு அவரது தலை வாளினால் வெட்டப்பட்டு உடல் சிலுவையில் அறையப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு நேற்று பகல் வைக்கப்பட்டது.

ரம்லிக்கு மரணதண்டனை ஐந்து பள்ளி மாணவர்களை தனது காரில் கடத்தி அவர்களை ஒரு இரகசிய இடத்திற்கு எடுத்துச்சென்று அவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி அதில் ஒருவரை பாலைவனத்தில் விட்டு இறக்கச் செய்ததற்காக பெப்ரவரி மாதம் ஹய்ல் உயர் நீதி மன்றம் மரணதண்டனை வழங்கியது.

பொலிஸார் இவரின் ரகசிய இடத்தை கண்டு பிடிப்பதற்கும் அவரையும் கைதுசெய்வதற்கும் எஏவயதையுடைய ஒரு யமனைச் சேர்ந்த பையனைப் பயன்படுத்தியதாக அந்நாட்டு பத்திரிகைகளை தெரிவிக்கின்றன. இவர் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக றியாத்திலுள்ள மீயூயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது அந்நீதிமன்றம் இவருக்கு உடனடியான மரணதண்டனை வழங்கப்பட்டு அவரின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்தது.

சவூதி அரேபியாவில் 102 பேருக்கு கடந்த வருடம் தலைகள் வெட்டப்பட்டுள்ளன. அமெஸ்டி இன்டர்நெஷனலின் தகவலின் படி அடுத்து 138 பேர் இத் தண்டனைக்காக காத்திருக்கின்றனர். இறுதியாக கடந்த மே மாதம் இதே குற்றத்தின் பெயரில் தண்டனை வழங்கப்பட்ட ஆறுபேருக்கு தலைகள் துண்டிக்கப்பட்டு தலைநகரில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு நேற்று மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது இவர்கள் கொள்ளையடித்தல் மற்றும் கொலைகள் புரிந்ததற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

சவூதியில் மரணதண்டனைக்கு உள்ளாகும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் புரிந்த கொலைக்காக வழங்கப்படும் இரத்தத்தை ஓட்டியதற்கான பணம் நஸ்ட ஈடாக கொடுக்க முடியாமையால் வழங்கப்படுகின்றது என்பது திண்ணம்.

இலங்கையைச் சேர்ந்த அப்பாவி ஏழைகள் பலர் தாங்கள் தற்செயலாக புரிந்த கொலைகளுக்காக அல்லது அவர்கள் மாட்டிவிடப்பட்ட கொலைகளுக்கா இவ்வாறான தண்டனைகளுக்கு உள்ளாகுகின்றனர். இவர்களில் அதிகமானோர் வட கிழக்கைச் சேர்ந்த ஏழைகளின் பிள்ளைகள் இவர்களுக்கு சட்ட உதவிகள் சவூதி அரேபியாவில் வழங்கி அவர்களுக்காக நஸ்ட ஈட்டைச் செலுத்தி அவர்களை காப்பாற்ற எந்த அமைப்பும் நம் மத்தியில் இல்லை என்பது கவலைதரும் விடயமாகும்.