வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இலங்கையில் ஈழத்திற்கு இந்தியா ஒருபோதும் துணைபோகாது : அடித்துக் கூறுகிறார் ரணில்



ரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமானால் சர்வதேசத் தலையீடுகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதனை எதிர்த்து குரல் கொடுப்போம் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியா ஒருபோதும் இலங்கையில் தமிழீழத்துக்கு துணைபோகாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். வட கொழும்பு நிறைவேற்று சபைக் கூட்டம் வடகொழும்பு பிரதான அமைப்பாளரும் எம்.பி. யுமான ரவி கருணாநாயக்கவால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாலத்துறை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க் கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்தவுடன் ஐ.நா.மனித உரிமை ஆணைக் குழுக் கூட்டத்தில் இலங்கையின் யுத்த வெற்றியை அரசாங்கம் அறிவித்ததோடு அரசியல் தீர்வை வழங்குவதாகவும் யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் மனித உரிமைகள், ஜனநாயகம் பாதுகாக்கப்படும் அதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்து அதன் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தது. எதிர்க் கட்சி இது போன்று எந்த உறுதிமொழிகளையும் வழங்கவில்லை. நாமும் இதனையே கேட்கின்றோம். நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றாது காலம் கடத்துவது ஏன்? அண்மையில் நான் இந்தியா சென்ற போது அங்குள்ள தலைவர்களும் இக் கேள்வியையே என்னிடம் கேட்கின்றனர். அத்தோடு இலங்கையில் தமிழீழத்திற்கு இந்தியா ஒருபோதும் துணைபோகாது என்றும் உறுதியளித்தனர் என்று அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’