நேற்றையதினம் (16) கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு பிரதேசங்களிலும் நாம் மக்களை சந்திக்கின்றபோது மக்களால் எங்களுடைய கவனத்திற்கு கொண்டுவரப்படுகின்ற எல்லாப்பிரச்சினைகளும் தேவைகளும் முக்கியமானவையே அவை தீர்த்து வைக்கப்படவேண்டும். எமது மக்களை தேவைகளையும் பிரச்சினைகளையும் அதிகம் உள்ள சமூகமாக யுத்தம் மாற்றிவிட்டிருக்கிறது எனவே இந்த தேவைகளையும் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது இருப்பினும் பலரும் எதிர்பார்ப்பது போன்று ஒரு குறுகிய காலத்திற்குள்ளோ அல்லது சம காலத்;திலோ மக்களின் எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கமுடியாது அது யாதார்த்திற்கு புறம்பானது எனவே மீள்குடியேற்றத்திற்கு பின்னரான கடந்த மூன்றரை ஆண்டுகளில் எவ்வாறு மக்களின் வாழ்விலும் பிரதேசங்களின் அபிவிருத்தியிலும் பெருமளவு முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டனவோ அவ்வாறே எதிர்காலத்திலும் படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்படும் இதனை கடந்த மூன்றரை ஆண்டுகால செயற்பாடுகள் மூலம் நிரூபித்திருக்கின்றோம் எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்
மேலும் தெரிவிக்கையில் முட்கொம்பன் பிரதேசம் அதனடிப்படையில் முன்னுரிமைப்படுத்தப்பட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பாக தற்போது சில திட்டங்களுக்கு ஊடாக முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ள பல உள்ளக வீதிகள் சிறு குளங்கள் என்பவற்றை புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அந்த பணிகளும் இன்னும் ஒரு சில மாதங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது மேலும் அறுபது இலட்சம் ரூபா செலவில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது அத்தோடு பாடசாலையுpலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் எனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியின் மூலம் பாண்ட அணி ஒன்றை உருவாக்குவதற்கு ஒரு இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது முக்கியமாக பாடசாலைக்கு சொந்தமான காணிகள் மீண்டும் பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அந்த காணிகளில் குடியிருப்போருக்கு மாற்று காணிகள் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முக்கியமாக மின்சாரம் இது இன்றைய நிலையில் மாவட்டத்தின் பெருபாலான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது வரலாற்றில் மின்சாரம் இல்லாத இடங்களுக்கு எல்லாம் மின்சாரம் கொண்டு செல்லப்பட்டுளள்து எனவே முட்கொம்பன் பிரதேசத்திற்கான மின்சாரமும் சாத்தியப்படாத நிலையிலேயே உள்ளது விரைவில் அதனையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்த அவர்
இங்கு மக்களாலும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளாலும் தெரிவிக்கப்பட்ட தேவைகள் பிரச்சினைகள் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படும் அவை எதிர்காலத்தில் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பூநகரி பிரதேச சபை தவிசாளர் சிறிஸ்கந்தராஜா பூநகரி பிரதேச சபை உறுப்பினர் இராசலிங்கம,; குகேந்திரன், கிளிநொச்சி மாவட்டச் செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் கேதீஸ்வரன், பூநகரி பிரதேச செயலக உதவித்திட்டப்பணிப்பாளர் சொர்க்கநாதன், பூநகரி பிரதேச சபையின் செயலாளர் மேரி மெக்டலின், பூநகரி பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் நிர்மல றொபின்சன், கிராம சேவையாளர், கமநல சேவை நிலைய உத்தியோகத்தர் மக்கள் அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’