
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து நாட்டில் ஜனநாயகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. ஆனால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ளடங்கியுள்ள எந்தப் பரிந்துரையையும் அரசாங்கம் இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. இந்நிலையில் அரசாங்கம் கடந்த 4 வருடங்களாக நாட்டு மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றி தனது ஆட்சியை கொண்டு நடத்தியது. ஆனால் அதன் பிரதிபலிப்புக்கள் தற்போது ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. அதிலொன்று தான்அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய உதவித் தொகையில் 20 வீதக் குறைப்பு. இதேவேளை, ஏனைய உலக நாடுகளும் எமது நாட்டுக்கு எதிராக இவ்வாறு செயற்படுமேயானால் அரசாங்கம் அல்ல நாட்டு மக்களே பாரிய சவல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். ஆரம்பத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்பை மக்களே இவ்வாறான சுமைகளை தாங்கினர். ஆனால் தற்போது சிங்கள மக்களும் இச் சுமையை சுமக்க தள்ளப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’