.jpg)
தொப்பிகலைப் பிரதேசம் 30வருட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டது. அந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார். அது மட்டுமல்லாமல் தொப்பிகலையில் இராணூவ பாரம்பரியத்தைக் கொண்ட பாரம்பரிய பூங்காவொன்றையும் திறந்து வைத்தார். இதன்போது பாதுகாப்புச் செயலாளருக்கு அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் குறித்த நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வில் இலங்கை இராணூவத்தளபதி மேஜர் லெப்டினென்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய,இலங்கை கடற்படைத் தளபதி,விமானப் படைத்தளபதி,பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன்,கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா,கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர,கிழக்கு மாகாண இரானுவ உயர் அதிகாரிகள்,பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ நீண்ட நாளைக்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’