
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் எம்.பி.க்கள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளனர். இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் வாதிக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஆறு எம்.பி.க்களே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அழைப்பின் பேரிலேயே இந்திய எம்.பி.க்கள் குழுவினர் இலங்கை வருகின்றனர். இவ்வாறு விஜயம் மேற்கொள்ளும் இந்திய எம்.பி.க்கள் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டபல தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’