
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடிப் பகுதியிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை ஒன்றின் உரிமையாளரான சிவகுரு ரகு (வயது 48) மற்றும் அவரது மனைவியான ரகு விப்ரா (வயது 41) ஆகியோரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்றுள்ளார் -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’