வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 ஏப்ரல், 2013

புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டினார்: விக்கிலீக்ஸ்



மிழீழ விடுதலைப் புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டியதாக அமெரிக்கா குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புலிகளை ஒடுக்குவதற்கு முயற்சித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களை சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதற்குக் கூட ஜெயலலிதா அஞ்சவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் இரும்புப் பெண் என வர்ணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதராக் முதல்வர் கருணாநிதி செயற்பட்டதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த க்ருணாநிதி, 1989ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’