
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதித்தால் மத்திய அரசாங்கத்தினால் யுத்த வலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் யுத்த வலயத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மக்களே கூடுதலான பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசாங்கம் 4000 கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதில் சிரமம் இல்லை என்ற போதிலும் இதனால் இலங்கை வாழ் தமிழர்கள் பாதிக்கப்படுவர். இலங்கையில் தமிழ் மக்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றினால், இலங்கைக்கு ஆதரவான நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரிக்கக் கூடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’