ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி தெரிவித்தார்.
நாட்டில் இன்று முஸ்லிம் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ஹக்கீம் உலக தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாட்டை நடத்தவுள்ளார் என அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் அமைச்சர் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையற்றவர் என தெரிகின்றனது. என அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் மனதில் மாற்றமொன்றினை கொண்டுவர அரசாங்கம் அமைச்சர் ஹக்கீமை பயன்படுத்தியுள்ளது எனவும் அசாத் சாலி குற்றஞ்சாட்டினார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் செய்தியாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போதே அசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், பலாங்கொடையிலுள்ள குரகல்ல – ஜெய்லானி பள்ளிவாசல் விடயத்தில் தலையிடுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவிற்கு என்ன அதிகாரமுள்ளது. குறித்த இடம் தொல்பொருள் பிரதேசம் என்பதால் தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் குறித்த விவகாரத்தில் தலையிட முடியும். அனால் பாதுகாப்பு செயலாளர் குறித்த பிரதேசத்திற்கு அண்மையில் விஜயம் செய்துள்ளார். இதன்மூலம் இந்த பிரச்சினையில் இவர் தலையிடுகின்றார் என்பது தெரியவருகின்றது. தற்போது குனூத் அந்நாஸிலா ஒதுவதை நிறுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என அகில இலங்கை ஜம்இயதுல் உலமா தெரிவித்துள்ளது. குனூத் அந்நாஸிலா ஒதுவதை நிறுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளரினால் வெளியிடப்பட்ட ஊடாக அறிக்கை பாதுகாப்பு அமைச்சிலிருந்தே வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையாகின்றது. முஸ்லிம்களுக்குரிய பிரச்சினை இதுவரை முடியவில்லை. இதனால் தொடர்ந்து குனூத் ஓதவும். பிரச்சினைகள் முடியும் வரை தொடர்ந்து குனூத் அந்நாஸிலாவை ஓதவும். தற்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தியின் பேச்சை காணவில்லை. அவரும் பொது பல சேனவுடன் இணைந்து அமெரிக்கா சென்றுவிட்டாரா' என அவர் கேள்வி எழுப்பினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’