வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

மாத்தளை புதைக்குழியில் இராணுவம் ரோந்து: அமரசிங்க முறைப்பாடு



மாத்தளையில் எழும்புகூடுகள் மீட்கப்பட்ட புதைக்குழிக்கு புதன்கிழமை இரவு இராணுவம் ரோந்து செய்ததாக மக்கள் விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தலைவர் சோமவங்ச அமரசிங்க பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார். சீருடையணிந்த இராணுவத்தினர் புதன்கிழமை இரவு 9.30 மணிக்கு புதைகுழியை சுற்;றிவந்ததாக அமரசிங்க தனது முறைப்பாட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த புதைகுழி தொடர்பிலான சட்ட செயன்முறைகள் இன்னும் முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'நீதி மற்றும் சட்ட செயன்முறைகள் தலையீடுகளின்றி தொடரவேண்டும்' என்பது எமது கோரிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த புதைகுழியில் காணப்பட்ட 154 எலும்பு கூடுகள் தமது கிளர்ச்சி காலத்தில் காணாமல் போனவர்களுடையதாகும் என ஜே.வி.பி நம்புகின்றது. இவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கைகள் உறுதிசெய்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’