வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கைக்கு நேரம் ஒதுக்கப்பட்ட போதும் உரையாற்றவில்லை



ஜெனீவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'மனித உரிமைகளை அனுபவித்தலில் ஊழலின் பாதக விளைவு" என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதி உரையாற்றுவதற்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் அதில் உரையாற்றவில்லை. மனித உரிமைகளை அனுபவித்தலில் ஊழல் என்ற தலைப்பிலான கலந்துரையாடலுக்கு வழங்கப்பட்டிருந்த உரிய நேரம் முடிவடைந்து விட்டமையினால் இவ்வாறு உரையாற்றுவதற்கு இலங்கைப் பிரதிநிதிக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்த அமர்வில் ஆரம்ப உரையை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நிகழ்த்தியதுடன் லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் என்பன உரையாற்றின. இலங்கை உட்பட கியூபா, கட்டார், லிபியா, கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் நேரம் போதாமையினால் நேற்று முன்தினம் பேரவையில் உரையாற்றவில்லை. எனினும் இந்த நாடுகள் குறித்த அமர்வில் வாசிக்கவிருந்த அறிக்கையை ஆவணமாக மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்துள்ளன. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’