வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 15 மார்ச், 2013

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க விபசாரத்தை சட்ட ரீதியானதாக்க வேண்டும்



லங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக விபசாரத்தை சட்ட ரீதியானதாக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென்மாகாண உறுப்பினர் அஜித் பிரசன்ன கூறினார்.
இலங்கையில் போதிய பெண்கள் கிடைக்காது விடின் வேறு நாடுகளிலிருந்து பெண்களை வரவழைக்கலாம் எனவும் அவர் கூறினார். இலங்கையில் தற்போது 40,000க்கும் மேற்பட்ட பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரியா, தாய்லாந்து உட்பட சில நாடுகளுக்கு சென்றபோதே தனக்கு இவ்வாறான யோசனை தோன்றியதாக அவர் கூறினார். இந்தோனேஷியாவில் இது சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும் விபசார விடுதிகளை பொலிஸார் முற்றுகையிடுவதில்லை என அவர் மேலும் கூறினார். இவர் பேசிகொண்டிருந்தபோது குறுக்கீடு செய்த சபையின் தலைவர், 'இது இந்த அமர்வில் பொருந்ததாத பேச்சு' என கூறி அவரை தடுத்துவிட்டார் -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’