
"அடையாள அட்டை வழங்கல் எனது அமைச்சின் கீழ் இல்லை. எனினும் எனது அமைச்சு இதில் பங்களிக்கவுள்ளது" என அவர் குறிப்பிட்டார். முன்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது மும்மொழி அடையாள அட்டை பற்றி ஆலோசிக்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டையின் முன் பக்கத்தில் சிங்களமே காணப்படுகின்றது. இதை மாற்றி மும்மொழி அடையாள அட்டையை வழங்குவதே எமது விருப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த மாற்றத்தை கொண்டுவர ஒரு வருடமாவது எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’