நேற்றைய தினம் (12) யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் வடக்கு உளக்காவளை பிரதேசத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான முருகேசு சந்திரகுமார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிருந்து இரண்டு இலட்சத்து ஜம்பதாயிரம் நிதி ஒதுக்கீட்டிலும் பிரதேச மக்களின் பங்களிப்பிலும் அமைக்கப்பட்ட சனசமூக நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பின்தங்கிய நிலையிருந்த எங்களுடைய பிரதேசங்கள் இன்று படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றது என்றால் அது ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அவரது கட்சியினர் காட்டி வரும் அக்கறையே, நீண்ட காலமாக மின்சாரம் இன்றி இருளிலிருந்த எமது வாழ்வும் பிரதேசத்தினதும் நிலைமையினை பாராளுமன்ற உறுப்பினர் சநதிரகுமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர் மின்சார சபையின் வடக்கின் வசந்த அதிகாரிகளுடன் எமது கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டு உடனடி நடவடிக்கையினை மேற்கொண்ட மின்சாரத்தினை பெற்றுத்தந்துள்ளார். எனவே இந்த ஒரு விடயத்திற்காவது எமது கிராமம் என்றென்றும் அவருக்கும் அவரது கட்சியினருக்கும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் இன்றும் நாம் கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பான பல தேவைகளை கூறியுள்ளோம் அவற்றினையும் கவனத்தில் எடுத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள், எப்பொழுதும் வறிய மக்களின் வாழக்கை மேம்பாட்டில் எமது கட்சி மிகவும் அக்கறையோடு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இந்த கிராமத்திற்கு மின்சாரத்தினை பெற்றுக்கொடுத்தது போன்று ஏனைய தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் குறிப்பாக முக்கியத்தேவையாக காணப்படுகின்ற கிராமத்தின் வீதி புனரமைப்பு திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத்தெரிவித்த அவர்,
பின்தங்கிய கிராமங்கள் மற்றும் சமூகங்களின் முழுமையான முன்னேற்றங்கள் என்பது அந்த கிராமம் அல்லது சமூகம் கல்வியில் வளர்ச்சி அடையும் போதே சாத்தியமாகும் எனவே இவ்வாறான பிரதேசங்கள் கல்வியில் தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும் அதுவே இவ்வாறான பிரதேசங்களின் நிலையான அபிவிருத்திக்கு வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டர்.
ஸ்ரீஞானவைரவர் சனசமூக நிலையத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மானிப்பாய் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான அன்ரன் ஜோன்சன், மற்றும் கட்சியின் வலிகாம் பிரதேச அமைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான பாலகிருஸ்னண் கிராம அலுவலர் நித்தியானந்தம், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’