
20 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16 ஆம் பெனடிக்ட், கடந்த 28ஆம் திகதி தனது பதவியை துறந்து வத்திக்கான் நகரில் இருந்து வெளியேறினார். இதைதொடர்ந்து புதிய போப் ஆண்டவரை தெரிவுசெய்ய, உலகம் முழுவதும் இருந்து வருகைதந்திருந்த 115 கர்தினால்கள் வத்திக்கான் தேவாலாயத்தில் கூடி, இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தினர். முதல்நாளன்று ஒருவரும் தெரிவு செய்யப்படாமையினால் Sistine Chapel இன் புகைப் போக்கியில் இருந்து கரும்புகை வெளியானது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று புதிய பாப்பரசராக ஆர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு செய்யப்பட்டார். புதிய பாப்பரசர் தெரிவானதையடுத்து வத்திக்கானின் Sistine Chapel இன் புகைப் போக்கியில் இருந்து வெண்ணிறப்புகை வெளியானதுடன் புனித பீற்றர்ஸ் பஸிலிக்காவின் மணியும் அடிக்கப்பட்டது. இதிலிருந்து உலகக் கத்தோலிக்கர்களின் புதிய தலைவரான 266ஆவது பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதற்கான சமிக்ஞைகள் வெளியானதுடன் உத்தியோகபூர்வமாகவும் அறிவிக்கப்பட்டது. பிஷப் பெர்கோக்லியோ, போப் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்தெடுந்தார். இனி அவர் போப் முதலாம் பிரான்சிஸ் என்றே அழைக்கப்படுவார். அதன் பின்னர் அரண்மனை வளாக மாடத்திற்கு வந்த போப் முதலாம் பிரான்சிஸ், அங்கு ஆரவாரத்துடன் காத்திருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அன்பும் சகோரத்துவமும் வளர உலகம் வழிகாண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’