வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 மார்ச், 2013

பிக்கு ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்ட வேண்டும் என்பதே நோக்கம்: தாக்குதலுக்குள்ளான பிக்கு


லங்கை தேரர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்டவேண்டும் என்பதே என்னை தாக்கியவர்களின் நோக்கமாக இருந்தது என்று சென்னை ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான பிக்கு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ரயில் நிலையத்தில் வைத்து தாக்குதலுக்குள்ளான வடுபொல வங்கீச தேரர் நேற்று மாலை நாடு திரும்பினார். அவரை அழைத்து வருவதற்கு பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றனர். இலங்கை வந்த பௌத்த பிக்கு, தம்மை தாக்கியவர்களின் நோக்கம் குறித்த இவ்வாறு விளக்கமளித்தார். தமது உடலில் சிராய்ப்புகளோ, காயங்களோ உள்காயங்களோ ஏற்படவில்லை. இலங்கை தேரர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் உலகிற்கு காட்டவேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது. எனது சம்பவத்திற்கு பின்னர் புத்தகாயாவுக்கு செல்லும் இலங்கை யாத்திரிகர்கள் விமான நிலையத்தில் இருந்து சென்னை மாபோதிக்கும் அங்கிருந்து ஏனைய யாத்திரை தளங்களுக்கும் கொண்டுச் செல்லப்படுவார்கள். இதன்போது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு தரவேண்டியது அவசியமாகின்றது. எனவே தமிழக அரசும், இலங்கையும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’