ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துமாறு கோருவோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் தமது நிலைப்பாடு குறித்தும் அங்கத்துவ நாடுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரேரணைகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற நல்லிணக்க முன்னேற்றங்களுக்கு பாதிப்பாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’