
தி.மு.க நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க எம்.பிக்கள் குழுவினரே ஜனாதிபதியை டில்லியில் சந்தித்து அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்களை கையளித்தனர். இந்நிலையில் தி.மு.க மத்திய அமைச்சர்கள் புதன்கிழமை ராஜினாமா செய்வார்கள் என்றும் ராஜினாமா கடிதங்களை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளிப்பார்கள் என்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இலங்கை தமிழர் விவகாரத்தில், எங்களுடைய கோரிக்கையை மத்திய அரசு பரீசிலனை செய்யவில்லை. இனியும் மத்திய அரசில் நீடிப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகமாக அமையும். எனவே, மத்திய ஆட்சியில் இருந்தும், கூட்டணியில் இருந்தும் விலகுகிறோம். வெளியில் இருந்தும் மத்திய அரசை ஆதரிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் கலைஞர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’