வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 மார்ச், 2013

வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் அரசு : சம்பந்தன் எம்.பி.



.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையோ நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கால அவகாசம் கோரவில்லை. தமது சொந்த நிகழ்ச்சி நிரலான வடக்கு, கிழக்கில் இன விகிதாசாரத்தை மேலும் மாற்றியமைக்கவும் மொழி, கலாசார ரீதியான அடையாளங்களை இல்லாதொழிப்பதற்குமே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கோ முயற்சித்துவருகின்றது என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் எந்த விடயத்திலும் இதுவரை நம்பிக்கை தரக்கூடிய விதத்தில் செயற்படவில்லை. இந்நிலையில், அரசாங்ம் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ அல்லது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கோ கால அவகாசம் கோரவில்லை. மாறாக வடக்கு , கிழக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’