வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 மார்ச், 2013

அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக நோக்குவது துரதிஸ்டவசமானது – பிரசாத் காரியவசம்

ரசியலையம் விளையாட்டையும் ஒன்றாக நோக்குவது மிகவும் துரதிஸ்டவசமானது என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். எமது பிராந்தியத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் இலங்கை வீரர்களை இணைத்துக் கொள்ளக் கூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கடிதம் ஊடாக கோரியிருந்தார். இலங்கை விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், நடுவர்கள் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டால் மட்டுமே சென்னையில் போட்டிகளை நடாத்த அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் பிரசாத் காரியவசம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எமது கிரிக்கட் வீரர்கள் விலை மதிப்பற்றவர்கள் எனவும், அவர்களது பாதுகாப்பு மிகவும் முதன்மையானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பார்கள் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக போட்டி அமைப்பாளர்கள், இந்திய அரசாங்கம், இந்திய கிரிக்கட் வாரியம் ஆகியன உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே இலங்கை கிரிக்கட், இந்தப் போட்டித் தொடரில் வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’