வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 மார்ச், 2013

அமெரிக்காவுடனான உறவுகளில் கடுகளவேனும் விரிசலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது: மேர்வின்


ஐ க்கி நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. நாம் எவருடனும் கோபம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அமெரிக்காவுடனான உறவுகளை தொடர்ந்தும் பேண வேண்டும். கடுகளவேனும் உறவுகளில் விரிசலை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்தியாவைச் சேர்ந்த சில மிலேச்சர்களின் நடவடிக்கைகள் காரணமாக அந்ந நாட்டுடனான உறவுகளை துண்டிக்க வேண்டியதில்லை. ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் போராட்டம் நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றால் இந்தியர்களின் ஆடைகளையே களைய வேண்டும். இந்தியாவை நாம் நேசிக்கின்றோம். இதேவேளை, களனிலியிலிருந்து தம்மை விரட்டியடிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’