வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 மார்ச், 2013

இனவாதத்துக்கு எதிராக கிழக்கில் ஹர்த்தால்: இராணுவத்தினர் குவிப்பு



முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பொது பலசேனாவின் இனவாத செயற்பாட்டை கண்டித்தும் நாடு தழுவிய ரீதியிலும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலும் இன்று திங்கட்கிழமை கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் கண்டன கடையடைப்பும் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் முதலாம் தவனைப் பரீட்சை இடம்பெறுவதால் வழமை போன்று மாணவர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி பாடசாலை செல்வதை காணமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவருவதோடு வர்த்தக நிலையங்கள்,சந்தைகள், மூடப்பட்டு காணப்படுகின்றன. இதேவேளை பிரதேச செயலகம், அரச அலுவலங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு சேவைகள் இடம்பெற்று வருவதோடு இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டடுள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினாவதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் இன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டித்து சாத்வீகமான முறையில் போராட்டம் நடத்துமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள்விடுத்திருந்தது. இதற்கமைவாகவே இன்று முஸ்லிம் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கக் கூடாது என பாதுகாப்பு தரப்பினரால் பல்வேறு அழுத்தங்களும் வேண்டுகோள்களும் விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே கிழக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’