வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 மார்ச், 2013

இலங்கை விவகாரம்; இந்திய நடிகர்கள் உண்ணாவிரதம்; ரஜினி, கமல் பங்கேற்பு



லங்கை அரசாங்கத்தைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளன. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றிபெற்றது. ஆனால் இந்த தீர்மானத்தால் எந்த பயனும் இல்லை. அது நீர்த்துப்போன ஒன்று என்று பலர் தெரிவித்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிராக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 2ஆம் திகதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா வீதியில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளவுள்ளனர். உண்ணாவிரதத்தையொட்டி வரும் 2ஆம் திகதி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு நடிகர், நடிகைகள் அனைவரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’