வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 25 மார்ச், 2013

இலங்கை விவகாரம்; தமிழக சட்டப் பேரவையில் அமளி; தி.மு.க வெளிநடப்பு



லங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகம் தூரோகம் இழைத்துவிட்டது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013 - 2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க தலைவர் முகருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அ.தி.மு.க.வின் இந்த குற்றச்சாட்டிற்கு தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, '1956ஆம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக' கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் வளர்மதி ஆகியோர், 'இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், அந்த இனமே அழிவதற்கும் தி.மு.க தான் காரணம்' என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’