ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால், அந்த நாட்டுடனான உறவுகள் பாதிக்கப்படாது என்று நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை – இந்தியா இடையிலான உறவுக்கு மிகப்பெரிய பெறுமானம் உள்ளது. இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்கு இந்தியா உதவி வருகிறது. எனினும், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா கடுமையான அறிக்கையை வெளியிட்டது. காரணம், அது முக்கியமான விவகாரம் என்று நான் உணர்ந்தேன். இலங்கையில் உள்ள தமிழர்களின் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தும் அதிகாரப்பகிர்வு பற்றிய நீண்ட வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’