வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 மார்ச், 2013

ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு திருப்திகரமானது: பிளேக்



லங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளேக் பிபிசிக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய இந்தியாவின் ஒத்துழைப்போடே சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்பட முடியும் என்றும் ரொபர்ட் பிளேக் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய தீவிரப் போக்கை குறைப்பதில் இந்தியா பங்காற்றியதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் பிளேக் நிராகரித்துள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’