தமிழ் மக்கள் மத்தியில் தான் மேற்கொண்ட தவறான அணுகுமுறை குறித்து தன்னை மீள்பரீசிலனை செய்கின்ற இறுதிச் சந்தர்ப்பமாக ஜெனிவா மாநாட்டை இலங்கை அரசு கருத்திற்கொள்ள வேண்டும்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
'அரசாங்கம் ஜெனிவா மாநாட்டைக் கருத்தில்கொள்ளத் தவறினால், ஒரு சில நாடுகளை தவிர இலங்கையரசு சர்வதேசத்தினால் அன்னியப்படுத்தப்படும் அதன் பின்னர் பொருளாதாரப் பின்னடைவுகளையும் பொருளாதாரத் தடைகளையும் சந்திக்க வேண்டிய சூழ் நிலைகள் உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாட்டின் அபிவிருத்தி , தேசிய ஒருமைப்பாடு ,அதன் சுயாதீனத் தன்மை, ஜனநாயகம் மற்றும் மரபுரிமை என்பன கேள்விக்குறியாகும். ஒரு நாட்டின் தேசிய இனங்களின் சுய கௌரவமும், சுய உரிமையும், ஜனநாயகமும், சுதந்திரமும் பாரபட்சமின்றி வழங்கப்படும் போது தான் அந்நாட்டின் தேசிய ஒருமைபாடும், அபிவிருத்தியும், தன்னிறைவும், தாய் நாட்டின் மீதான பற்றுறுதியும் உருவாகும். அதை விடுத்து ஒடுக்குமுறை அரசியலும் சர்வாதிகாரச் சிந்தனையும் இனவாத கோட்பாடுகளும் மகிந்த சிந்தனையில் கூறப்படுகின்ற ஐக்கிய இலங்கையை ஒருபோதும் உருவாக்காது மாறாக பேரினவாதிகளையே உருவாக்கும். இலங்கைத் தமிழர்களின் மீது மேற்கொள்ளப்பட்ட உச்சகட்ட ஓடுக்கு முறையின் சின்னமாக முள்ளிவாய்கால் படுnhகலைகளும், பேரவலங்களும், உரிமைகள் மறுப்பும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் சான்றாக்கப்பட்டுள்ளன. இதைவிட மேலான மனித நேயமற்ற, மனிதகுலத்திற்கெதிரான ஈவிரக்கமற்ற யுத்தத்தின் கொடுரம் காரணமாக ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், கொன்றழிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பாலசந்திரனின் படுகொலை மறைக்க முடியாத சிறந்த சான்றாகும். கடந்த ஆறு தசாப்தங்களாக தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட மனிதஉரிமை மீறல்களும் இனஅழிப்பு நடவடிக்கைகளும் இதுவரையும் சர்வதேசத்தின் கண்களைத் திறக்கவில்லை. அந்தத் தைரியத்தில் இலங்கை அரசு 2009ஆம் ஆண்டில் மனித நேய நடவடிக்கை என்ற பேரில் பெரும் மனித உரிமை மீறல்களையும் மனிதகுலத்திற்கு எதிரான பேரவலங்ளையும் பெரும் மனிதப்படுகொலைகளையும் நிகழ்த்தியிருக்கின்றது. இந்தவகையில் ஜெனிவாவில் முன்வைக்கும் தீர்மானங்களை ஏற்க முடியாது என சூழுரைப்பதும் இத்தீர்மானங்களை ஏற்பதற்கு இலங்கை ஒரு அடிமை நாடல்ல என ஜக்கியநாடுகள் சபையில் இலங்கையில் உறுப்புநாடாக இருந்து கொண்டு அறிக்கை விடுவதும் ஜெனிவாவில் கூட்டமைப்பு காலடிவைத்தால் தமிழ் இனத்துக்கான நல்லிணக்கத்திற்கான கதவு உடன் இழுத்துமுடப்படும் எனக்கூறுவதும் ஆரோக்கியமானதல்ல. ஜெனிவாவில் இலங்கை நி;ர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டால் இந்தியாவும் பொறுப்புக்கூற வேண்டுமென விரட்டுவதும், சிங்களவர்கள் நினைத்தால் மாத்திரமே தமிழர்களுக்கு நீதிகிடைக்கும் என பகிரங்கமாக கூறுவதும், நியாயத்தன்மை கொண்டதல்ல. அறுபது ஆண்டுகால தமிழர் அபிலாசைகளை கோரிக்கைகளை தங்கள் ஒடிக்கி வந்ததற்கு உதாரணங்களாக சிங்கள அரசியல் ஆதிக்கவாதிகளும் சிங்கள இனவாத ஆட்சியாளர்களும் ஜெனிவாவில் முன்வைக்கப்படும் இலங்கை தொடர்பான மனித உரிமை மீறலுக்கான நிலைபாட்டினை நியாயப்படுத்துகின்ற சான்று ஆவணங்களாக ஜெனிவா தீர்மானங்களுக்கு மேலும் வலுச்சேர்கின்ற நடவடிக்கையாக இந்த அரசு தன்னை வெளிக்காட்டி நிற்கின்றது. அதேவேளை இந்த உன்மைதன்மையை சிங்கள மக்கள் புரிந்து கொள்கின்ற பொழுது சிங்கள ஆட்சியாளர்கள் இலங்கை தீவின் தமிழ் சிங்கள சகோதரத்துவத்ததை தங்கள் நலன்களுக்காக பிரித்தாழும் தந்திரத்தை உணரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எந்த மக்களை காரணம் காட்டி இனவாதம் பேசினார்களோ அந்த மக்களே தம் தேசத்தவர்களை காட்டிக்கொடுத்தவர்களை விரட்டி அடிப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’