யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (28) இடம்பெற்றது.
இதன்போது தீவகம் உள்ளிட்ட குடாநாட்டின் மண்வளத்தை ஆராய்ந்து அதன்பிரகாரம் அந்தந்தப் பகுதிகளில் எவ்வகையான பயிர்செய்கையினை மேற்கொள்ளலாம் என்பதுடன், இருக்கின்ற நீர்வளங்களை பாதுகாப்பதுடன் அவற்றை மாசடையாது பாதுகாத்துக் கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், நன்னீருடன் உவர்நீர் கலக்காமல் பாதுகாக்கும் பொருட்டும் மழை காலங்களில் நீர் நிலைகளில் நீரைத் தேக்குவது தொடர்பிலும் மற்றும் குளங்கள் மற்றும் வாய்க்கால்களினது புனரமைப்பு தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே மண் மற்றும் நீர் வளங்களின் ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், யாழ்.குடாநாட்டிலும் அதனை மேற்கொள்ளுவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மழை காலங்களில் மழைநீரை சேகரிப்பதனூடாக மழையில்லாத காலப்பகுதிகளில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதுதொடர்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இதனூடாகவே விவசாயம் மேலும் வளர்ச்சி காண முடியுமென்றும் தெரிவித்ததுடன், குடாநாட்டிலுள்ள தரிசு நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் அதேவேளை, அரசிடமிருந்து விசேட நிதியைப் பெற்று புல் மற்றும் மரங்களை நடுகை செய்வது தொடர்பிலும் இதனூடாக இயற்கை சமநிலையடையுமென்றும் தெரிவித்தார்.
அத்துடன், தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள், வேலணை சாட்டி பகுதியில் பிரதேச சபை மூலம் பொதுக்கிணறு ஒன்றை அமைத்து அதனூடாக பொதுமக்களுக்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் கவனம் செலுத்தினார்.
இதனிடையே தீவகத்தின் அபிவிருத்திக்கென மூன்று பிரதேச சபைகளுக்கும் தலா 100 மில்லியன் ரூபா வீதம் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்நிதிகளைக் கொண்டும் நீர் மற்றும் நில வளங்களைப் பாதுகாக்கும் திட்டங்களை உள்ளடக்கியதாக பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டிய அதேவேளை மக்களது சுகநலன்களைக் கருத்தில் கொண்டு இயற்கைப் பசளையூடாக விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் துறைசார்ந்தோரால் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது விவசாய விரிவாக்கல் பிரிவு, நீர்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், விவசாய ஆராய்ச்சி நிலையம், மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’