
இதற்கு முன்னர் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் நடைமுறைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் வகையிலேயே அமையப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், இலங்கையின் நிலைமை குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’