வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 16 மார்ச், 2013

ரணிலின் புரிந்துணர்வு அறிவிப்பை பசில் நிராகரிப்பு


ரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதாக எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
ரணில் விக்ரமாசிங்கவிற்கு அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் இலங்கை தொடர்பான ஐ.நாவின் நடவடிக்கை குறித்து பேசுவதற்கும் எந்த தார்மீக உரிமையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 'ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசாங்கத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் ஜெனிவா சென்று ஜனாதிபதி சார்பாக பேசுவதற்கு தயாராகவுள்ளனர்' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தயார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த புதன்கிழமை அறிவிப்பொன்றை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’