அரசாங்கம் அவசரமாக நிறைவேற்றுவதற்கு முயலுகின்ற 21 சட்டமூலங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு சபாநாயகர் அனுமதிப்பாராயின் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கொண்டுவரவேண்டியிருக்கும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்துள்ளது.
இந்த சட்டமூலங்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் நிலையியற்கட்டளைக்கு அமைவாக அவை சபைக்கு கொண்டுவரப்படவில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இந்த சட்டமூலத்தின் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு விநியோகிக்கப்பட்டது. இதனை அவையில் முன்வைத்ததாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சொன்னார். இந்த சட்டமூலங்கள் கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட வரவு-செலவுத்திட்ட ஆலோசனைகள் பற்றியவையாகும். இவை இவ்வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் அரசாங்கம் இதனை மறுத்துவிட்டது. இந்த சட்டமூலங்கள் பலவிதமான வரி அதிகரிப்புகள் தொடர்பானவையாகும். திருமணப்பதிவு மற்றும் காணிப்பதிவு கட்டணங்களும் இதில் உள்ளடங்குகின்றன. நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறாமலே அரசாங்கம் இந்த கட்டணங்களை ஏற்கனவே அதிகரித்து விட்டது. இந்நிலையில் இவ்வாறு அறவிடப்பட்ட பணத்தை அரசாங்கம் மக்களிடம் திருப்பிக்கொடுக்கவேண்டும் என்றும் கூறினார். -->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’