வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 மார்ச், 2013

இலங்கை விவகாரம்: இந்திய நாடாளுமன்றத்தில் அமளி துமளி நாள் முழுவதும் ஒத்திவைப்பு



லங்கை விவகாரம் மற்றும் நில மோசடி தொடர்பில் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளி துமளியை அடுத்து அமர்வு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றம் சபாநாயகர் மீராகுமார் தலைமையில் இன்று கூடியது. சபை பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் மறைந்த முன்னாள் உறுப்பினர் வீரென்ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தக்கப்பட்டது. அதனையடுத்து தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவையின் மைய பகுதிக்கு வந்து பிரபாகரனின் 12 வயது மகன் பிணை கைதியாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என அவரது புகைப்படத்தை காண்பித்து கோஷமிட்டார். அதனை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்களும் கோஷமிட்டனர். இதேபோல அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சினையை கிளப்பினார்கள். அத்துடன் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சோனியாவின் மருமகன் வதோராவின் நில மோசடி விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் கேள்வி நேரத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியதனால் அவரால் சபையை நடத்த இயலவில்லை. இதை தொடர்ந்து சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியதும் இலங்கை தமிழர் உட்பட பல பிரச்சனைக்காக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை பிற்பகல் 2 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமளி துமளி ஏற்பட்டமையினால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’