வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 27 மார்ச், 2013

வெலிக்கடை கலவரம்: 100 பக்க அறிக்கை தயார்



வெலிக்கடை சிறைக் கலவரத்தை ஆராய்ந்த மூன்று அங்கத்தவர் குழுவால் தயாரிக்கப்பட்ட 100 பக்க அறிக்கை இன்னும் சில தினங்களில் வெளியிடப்படவுள்ளது.
கலவரத்துக்கு காரணமாக இருந்தவர் யாராக இருப்பினும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கூறியுள்ளது. கலவரத்தின் போது சிறைக்காவலர்களின் நடத்தை, கலவரத்துக்கு இட்டுச்சென்ற சூழல், கைதிகளால் எவ்வாறு வெளியே வர முடிந்தது, ஆயுத களஞ்சியசாலை எவ்வாறு கலவரக்காரர்கள் வசமானது, என்பன பற்றிய விளக்கங்கள் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. வெலிக்கடை சிறைக்கலவரம் கடந்த 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றது. இந்த அறிக்கையின் முழுப் பகுதியும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கலவரத்தின் போது 27 கைதிகள் இறந்து போயினர். சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள் பதினொருபேர் பின்னர் பிடிபட்டமை குறிப்பிடத்தக்கது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’