வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 பிப்ரவரி, 2013

அழுத்தம் கொடுக்கும் நாடுகள் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இலங்கையின் முன்னேற்றங்களை அறியலாம்: கோத்தாபாய


லங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , 'யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும் அரசியல், இராஜதந்திர சவால்கள்" என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இம் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், நம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் பாரிய சவால்களை நாம் எதிர் கொண்டதுடன் கடந்த நான்கு வருட சமாதான காலத்தில் பல பாடங்களையும் கற்றுக் கொண்டோம். இதில் எமக்கு மிகப் பெரும் சவாலாக அமைந்தது இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது ஆகும். அதனையும் நாம் பாரிய சவால்களுக்கு மத்தியில் முன்னெடுத்தோம். இறுதி யுத்தத்தின் போது பல எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர். அம் மக்களுக்கு உடனடி மருத்துவ வசதிகள், சமைத்த உணவு மற்றும் காலநிலைக்கு ஏற்ற வகையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினோம். மருத்துவ முகாம்களை அமைத்தோம் குறிப்பாக புல்மோட்டையில் நடமாடும் மருத்துவ மனையொன்றை அமைத்து அதில் இராணுவ மருத்துவர்கள் சேவை புரிந்தனர். இதேவேளை, சரணடைந்த புலி உறுப்பினர்களை நாம் விசாரணை செய்து புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைத்தோம். இடம்பெயர்ந்த மக்களுக்கு லக்ஷ்மன் கதிர்காமர், ஆனந்த குமாரசுவாமி மற்றும் மெனிக்பாம் போன்ற நலன்புரி முகாம்களை அமைத்து உயர் உதவிகளை வழங்கினோம். இரணுவத்தால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மீள் குடியேற்றத்திற்குத் தேவையான சந்தை வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், கோயில்கள், பாடசாலைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை அமைத்தோம். எமக்கு அடுத்த பாரிய சவாலாக, கைப்பற்றப்பட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் அமைந்திருந்தன. அதனை அகற்றுவதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக டனிஷ் போன்றன எமக்கு உதவின. இதுவரை சுமார் அரை மில்லியன் மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. மீள் குடியேற்றத்திற்காக இந்நிய உதவியுடன் 40 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மீள்உருவாக்கத்திற்குத் தேவையான மனிதவளத்தை படையினர் அளித்தனர். இந்நிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான தொழில் உபகரணங்களை வழங்கினோம். இராணுவத்திடம் சரணடைந்த புலி உறுப்பினர்களை ஜனாதிபதியின் நோக்கத்தின் அடிப்படையில் சாதாரண வாழ்க்கையில் இணைத்துக் கொள்ளும் முகமாக அவர்களை விசாரணை செய்து, வகைப்படுத்தி புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்தோம். குறிப்பாக திருமணங்களை நிறைவேற்றிக்கொடுத்தோம். சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளில் தேற்ற அவர்களுக்கு ஆவன செய்தோம். இராணுவத்தினரிடம் சரணடைந்த 594 சிறுவர் போராளிகளை பாடசாலையில் இணைத்து கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆவன செய்தோம். தற்போது நாட்டில் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டு பல புதிய பொலிஸ் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் நிலையங்களில் அதிகமாக தமிழ் இளைஞர்களே கடமையில் உள்ளனர். எனவே, எமக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் சர்வதேச நாடுகள் எம்மோடு இணைந்து செயற்பட்டால் நாட்டின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியுமென்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’